இரண்டே மாசத்தில் மீண்டும் திமுக ஆட்சி... முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உரையாற்றினார். தனது ஆட்சியின் சாதனைகளை நினைவுகூர்ந்த அவர், “234 தொகுதிகளையும் என்னுடைய தொகுதிகளாக நினைத்து செயல்பட்டேன்” என்றார். தன்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். இன்னும் 2 மாதங்களில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசும்போது, “ஆட்சியின் வெற்றிக்கு என்னில் பாதியாக துணை நிற்கிறார்” என்று பாராட்டினார். இயக்க வளர்ச்சிக்கும், ஆட்சியின் முன்னேற்றத்துக்கும் அவர் செய்த பங்களிப்பு முக்கியம் என குறிப்பிட்டார். இருவரும் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் உறுதியளித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார். “எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவுக்கு திராவிட மாடல் 2.0 அமையும்” என்று உறுதியளித்த அவர், ஆட்சியின் முதல் நாள் மனஅழுத்தத்தையும், இன்றைய சந்தோஷத்தையும் உணர்ச்சியுடன் பகிர்ந்தார். அவரது உரை பேரவையில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!