உதயசூரியன் 'டார்கெட்' 175... 234லும் நானே நிற்கிறேன்...   ஸ்டாலின் உருக்கமான மடல்!

 


தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 175 இடங்களில் 'உதயசூரியன்' சின்னம் களம் காணப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28, தேமுதிக-வுக்கு 10, விசிக-வுக்கு 8 என இதுவரை 66 தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. "புதிய கட்சிகள் இணைந்துள்ள நிலையில், அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதைத் தோழமைக் கட்சித் தலைவர்களிடம் நேரில் விளக்கி, மனப்பூர்வமாகத் தொகுதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது கடிதத்தில், "234 தொகுதிகளிலும் இந்த மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்ற உணர்வுடன் உடன்பிறப்புகள் உழைக்க வேண்டும். உதயசூரியன் மட்டுமல்ல, நமது கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களும் நம் சின்னங்களே. மதவாத அரசியலையும், தமிழகத்தை வஞ்சிக்கும் சக்திகளையும் வீழ்த்தி, திராவிட மாடல் ஆட்சி தொடர அயராது பணியாற்றுங்கள்" என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். 175 இடங்களில் உதயசூரியன் சின்னம் போட்டியிடுவது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!