"ஸ்டாலினின் கொத்தடிமை, ஒட்டுண்ணி ரகுபதி" - அலற விட்ட அறிக்கை!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குப் ஆதரவாக அறிக்கை வெளியிட்ட அமைச்சர் ரகுபதியை, "ஆஸ்தான கொத்தடிமை" மற்றும் "ஒட்டுண்ணி" என விவரித்து அதிமுக தலைமை இன்று கடும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கள்ளக்குறிச்சி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அமைச்சர் புலம்புவதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது: "எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத்தான் தற்போது ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இது கூடத் தெரியாத மக்கு மந்திரிதான் ரகுபதி" எனச் சாடியுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 68 பேர் உயிரிழந்த போது, கள்ளக்குறிச்சி பக்கம் எட்டிப் பார்க்காத முதலமைச்சரும், அமைச்சரும் இப்போது 'காலரைத் தூக்கிக் கொண்டு' பேசுவது வெட்கக்கேடானது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. திமுக அரசு அதிமுகவின் திட்டங்களுக்குக் கலைஞர் பெயரைச் சூட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதாக மீண்டும் ஒருமுறை அதிமுக சாடியுள்ளது:
அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் சேலம் பேருந்து நிலையம் வரை கருணாநிதி பெயரை ஸ்டிக்கர் ஒட்டிய கூட்டத்திற்கு எங்களைப் பற்றிப் பேசத் தகுதி இல்லை. இடைநிலை ஆசிரியர்கள் (வாக்குறுதி 311), செவிலியர்கள் (வாக்குறுதி 356), மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் (வாக்குறுதி 309) என எதையும் நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களைப் போராட விடுவதுதான் இந்த "விடியா ஆட்சியின்" சாதனையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
அமைச்சர் ரகுபதியை நோக்கி, "வேட்டியை மாற்றியதும் கொள்கையைத் தூக்கி எறிந்துவிட்டு, கொத்தடிமையாக மாறிய மங்குனி அமைச்சர்" என்று அதிமுக தனது அறிக்கையில் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பதிலடி, முதலமைச்சரைக் கதற விட்டுள்ளதால் தான் அமைச்சரை ஏவி விட்டுள்ளார்கள் என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!