undefined

கண்மாயில் சுற்றிய அரிய நட்சத்திர ஆமை...  ஆச்சர்யம்!

 

சிவகாசி அருகே உள்ள சிறுகுளம் கண்மாயில் அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டது. இன்று காலை அப்பகுதி இளைஞர்கள் மூலிகை செடிகள் பறிக்க சென்றனர். அப்போது பெரிய வடிவில் ஒரு ஆமை ஊர்ந்து செல்வதை கண்டனர். அதின் ஓட்டில் நட்சத்திர வடிவங்கள் தென்பட்டன. உடனே அதனை பத்திரமாக பிடித்து பாதுகாத்தனர்.

பின்னர் அந்த ஆமையை அப்பகுதி மாமன்ற உறுப்பினர் மூலம் சிவகாசி நகர் காவல் நிலையம் கொண்டு சென்றனர். கண்மாயிலிருந்து மீட்கப்பட்ட ஆமையின் ஓட்டில் இருந்த அழகிய வடிவங்களை கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர். அரிய வகையைச் சேர்ந்தது என தெரிய வந்தது. இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் ஆமையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதேபோன்ற ஆமைகள் கண்மாயில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் விரைவில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!