பெண்களின் உள்ளாடைகளைத் திருடி, செல்ஃபி எடுத்து விபரீதம்... பெங்களூரு போலீசார் அதிர்ச்சி!
பெங்களூரு ஹெப்பகோதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த விசித்திரமான திருட்டுச் சம்பவம், சமூக வலைதள வீடியோக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த அமல் என்ற நபர், குடியிருப்புகளுக்கு வெளியே துவைத்து காயப்போடப்பட்டிருக்கும் துணிகளில், குறிப்பாகப் பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்துத் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். திருடிய உள்ளாடைகளைத் தனது அறைக்கு எடுத்துச் சென்று, அவற்றை அவர் அணிந்து பார்த்துள்ளார். மேலும், அந்த ஆடைகளுடன் செல்பி எடுப்பது மற்றும் வீடியோக்கள் எடுப்பதையும் அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதைக் கண்ட ஹெப்பகோதி போலீசார், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.ரகசியத் தகவலின் அடிப்படையில் அமலைத் தேடிப் பிடித்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, திருடி மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான பெண்களின் உள்ளாடைகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றைப் பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையைத் தொடர்ந்து அமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!