undefined

பகீர்... 60 லட்சம் ரத்தினக்கல்லை நகைவியாபாரியிடம் வழிப்பறி! 

 
 


தமிழகத்தில் மதுரை மாவட்டம் கட்சைகட்டி பகுதியில் வசித்து வருபவர்  முனியசாமி. இவர்  நகைகளில் ஜாதிக்கற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னிடம் உள்ள 7 கிராம் அலெக்ஸ்சான்டர் ரத்தினக்கல்லை, அதன் ரசீதுடன் விற்பனை செய்வதற்காக ஜனவரி மாதம் 21ம் தேதி அன்று ராமநாதபுரம் வந்திருந்தார்.  ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் 7 நபர்கள் கொண்ட மர்ம கும்பல் முனியசாமி வைத்திருந்த ரூ.60,000,00/- லட்சம் மதிப்பிலான அலெக்ஸாண்டர் ரத்தினக்கல், அதன் ரசீது, அவரது போன், ரொக்கம் ரூ.15,000/- பணத்தையும் பறித்து சென்று விட்டனர்.

தொடர்ந்து முனியசாமி ராமநாதபுரம் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. சந்தீஷ், ராமநாதபுரம் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பொன்தேவி தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவு பிறப்பித்திருந்தார்.  தீவிர விசாரணையை தொடங்கிய தனிப்படை போலீஸார் வழிப்பறியில் ஈடுபட்ட தூத்துக்குடியை  சேர்ந்த முத்துசெல்வம் என்பவரை முதலில் பிடித்து விசாரித்ததில், அவர் முனியசாமியிடம் இருந்து ரத்தினக்கல் இவற்றை பறித்து சென்றதை ஒத்துக்கொண்டதுடன், வழிப்பறியில் தொடர்புடைய மற்ற நபர்களின் விபரங்களை தெரிவித்துள்ளார்.


வழிப்பறியில் ஈடுபட்ட தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அபுதாஹிர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வசித்து வருபவர்  முகம்மது அசாருதீன், முகம்மது நௌபல், தூத்துக்குடியில் வசித்து  வருபவர் கனகராஜ், ராஜா ஜோஸ்குமார், கே. கனகராஜ் ஆகிய 7 பேர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த இரத்தினக்கல், ரூ. 15000 ரொக்கம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?