undefined

திருடிச் சென்று ரீல்ஸ் வீடியோ... 'ரவுடி பேபி' சூர்யா மீது எஸ்.பி-யிடம் கடை உரிமையாளர் புகார்!

 

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் மூலம் எப்போதும் செய்திகளில் இடம்பெறும் இன்ஸ்டாகிராம் பிரபலம் 'ரவுடி பேபி' சூர்யா, தற்போது ஒரு வினோதமான திருட்டுப் புகாரில் சிக்கியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபல காபி கடையில் டீ குடித்துவிட்டு, அந்த டீ கப்பைத் திருடிச் சென்றதாக அவர் மீது காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையின் உரிமையாளர் குமுறல்: தென்காசி ஐடி மூக்கு பகுதியில் 'நெல்லை கருப்பட்டி காபி' என்ற கடையைப் பார்த்திபன் என்பவர் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இந்த கடைக்கு ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது கணவர் சிக்கந்தர் ஆகியோர் வந்துள்ளனர். அங்கு அவர்கள் டீ குடித்துவிட்டு, கடைக்குச் சொந்தமான டீ கப்பைத் திரும்ப ஒப்படைக்காமல் தங்களது காருக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இது குறித்து கடையின் உரிமையாளர் பார்த்திபன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) முறைப்படி புகார் அளித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தங்களைப் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகப் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர். கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகிய இருவர் மீதும் போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கியுள்ள சூர்யாவிற்கு, இந்த 'டீ கப்' திருட்டு விவகாரம் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!