மின்சார ரயில் மீது கல்வீச்சு... 3 பயணிகள் காயம்... பரபரப்பு!
திருவள்ளூரில் இருந்து சென்னை சென்டிரல் மூர்மார்க்கெட் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. வியாசர்பாடி அருகே ரெயில் சென்றபோது, தண்டவாளம் அருகே நின்ற மர்ம நபர்கள் திடீரென கற்களை வீசினர். இதில் ரெயிலில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக அடுத்த ரெயில் நிலையத்தில் இறக்கப்பட்டனர். பின்னர் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கல்லெறியில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். சமீப நாட்களாக ரெயில்களுக்கு கல்லெறி சம்பவங்கள் அதிகரித்ததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதனை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!