undefined

அந்தியோதயா ரயில் மீது சரமாரி கல்வீச்சு... ஜன்னல் கண்ணாடி உடைந்து பெண் பயணி காயம்!

 

நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயிலில் நேற்று இரவு நிகழ்ந்த கல்வீச்சு சம்பவத்தில், ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணித்த பெண் ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நெல்லை, மதுரை வழியாகத் தாம்பரம் நோக்கி அந்தியோதயா விரைவு ரயில் (Antyodaya Express) நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. ரயில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கடந்து சென்ற போது, இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென ரயிலைக் குறி வைத்துச் சரமாரியாகக் கற்களை வீசினர்.

மர்ம நபர்கள் வீசிய கல் ஒன்று ரயிலின் 5-வது பெட்டியின் ஜன்னல் கண்ணாடி மீது பலமாகத் தாக்கியது. இதில் ஜன்னல் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியது. அந்த ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி என்ற பெண்ணின் முகம் மற்றும் தலையில் கண்ணாடித் துகள்கள் விழுந்து காயம் ஏற்பட்டது. ரயில் நெல்லை நிலையத்தை அடைந்ததும், அவருக்கு உடனடியாக ரயில்வே மருத்துவக் குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரயில் மீது கல்வீசிய சமூக விரோத கும்பலைப் பிடிக்கப் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே தண்டவாளப் பகுதிகளில் அநாவசியமாக நடமாடும் நபர்களைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில்கள் மீது கல்வீசுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!