டிட்வா புயல்... துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள்! 

 
 

 

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண், புதுச்சேரியில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டன. உயர்காற்றழுத்த மாற்றத்துடன் இணைந்த இந்த அமைப்பு, அடுத்த சில மணிநேரங்களில் கடலோரப் பகுதிகளில் அலை உயர்வை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்திய பெருங்கடல் சுமித்ரா தீவு அருகே 6.5 ரிக்டர் அளவில் நில நடுக்கமும் பதிவாகியிருப்பதால், வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை கடல் அலைகள் 2.7 முதல் 3.3 மீட்டர் வரை உயரும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் மற்றும் கடற்கரை குடியிருப்போருக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், படகுகள், வலைகள் உள்ளிட்ட கருவிகள் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் தேங்காய்திட்டு பகுதிகளில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் அடுத்த அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலில் உள்ளவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் மீனவ அமைப்புகள் மற்றும் கிராம நிர்வாகங்கள் தகவலை விரைவாக பரவச் செய்ய வேண்டும் என்றும் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். புயலைக் கருத்தில் கொண்டு எதிரொலி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், கடலோரம் முழுவதும் எச்சரிக்கை சூழல் நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!