undefined

7 துறைமுகங்களில்  1ம் எண் , 2 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்! 

 
 

குமரிக் கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புதன்கிழமை நள்ளிரவில் மேலும் வலுப்பட்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக கடற்கரை நோக்கி நீளப் பயணம் செய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனை முன்னிட்டு தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் நிலை மாற்றம் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை விடுக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் துறைமுகங்களில் நிலைமை கடுமையடையும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் திசை மாற்றத்தைக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர். கடலோர மாவட்டங்கள் முழுவதும் விழிப்புடன் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!