undefined

ஹார்முஸ் நீரிணை மூடல் எச்சரிக்கை… உலக எண்ணெய் சந்தைக்கு பெரும் அதிர்ச்சி!

 

மத்திய கிழக்கில் போர் நிலை தீவிரமடைந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அலி அயத்துல்லா கமேனி உட்பட பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் நோக்கம் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முறியடிப்பதாக அமெரிக்கா–இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவித்துள்ளது. “ஒரு சொட்டு எண்ணெய் கூட இந்த நீரிணை வழியாக செல்லாது” என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% இந்நீரிணை வழியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் உலகளவில் எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது. 85% எண்ணெய் தேவையை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கும் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தொழில்துறை மற்றும் போக்குவரத்து துறைகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. நிலைமையை கவனித்து ஒன்றிய அரசு ஆலோசனைகள் மேற்கொண்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!