undefined

தெருநாய்கள் கொடூரம்... ஒரே இரவில் 20 ஆடுகள் பலி!

 

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே காணிக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. இவர் 120 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். தினமும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மாலையில் வயல்காட்டில் உள்ள பட்டியில் அடைப்பது வழக்கம். நேற்று இரவும் அதேபோல் ஆடுகளை அடைத்துள்ளார். நள்ளிரவில் பட்டியில் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை விரட்டி கடித்தன.

ஆடுகளின் சத்தம் கேட்டு ஓடி வந்த செந்தூர்பாண்டி நாய்களை விரட்டினார். ஆனால் அதற்குள் 20 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 5 ஆடுகள் பலத்த காயமடைந்தன. உடனே சாயல்குடி கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவர் வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.

குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த ஆடுகள் பலியானதால் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் செந்தூர்பாண்டி கவலையில் ஆழ்ந்துள்ளார். அரசு உடனடி இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!