undefined

அரசு ஊழியர்களுக்கு போராட்ட விவகாரம்... இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்புகளுடன் அமைச்சர்கள் குழு அவசர ஆலோசனை!

 

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நிலவி வரும் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக அரசு இன்று ஒரு முக்கியப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஆய்வு செய்ய ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை ஏற்கனவே அரசிடம் சமர்ப்பித்து விட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் அடங்கிய குழு இன்று காலை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்துகிறது. ககன்தீப்சிங் பேடி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், ஓய்வூதியத் திட்டம் தொடர்பாகத் தமிழக அரசு ஒரு இறுதி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த முடிவு என்ன என்பதை இன்று போராட்டக் கூட்டமைப்புகளிடம் அமைச்சர்கள் தெரிவிக்க உள்ளனர்.

அரசின் முந்தைய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக இந்த அமைப்புகள் அறிவித்துள்ளன.

இன்றைய கூட்டத்தில் அரசு முன்வைக்கும் திட்டத்தை (அது பழைய ஓய்வூதியத் திட்டமா அல்லது மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைப் போன்ற ஒன்றா என்பது இன்று தெரியும்) தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொண்டால், ஜனவரி 6 போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட வாய்ப்புள்ளது.

பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்காலம் இந்த முடிவில் தங்கியுள்ளதால், இன்றைய ஆலோசனைக்குப் பிறகு அரசு வெளியிடப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!