இன்று முதல் அரசு பள்ளிகளில் ‘மாணவர் சேர்க்கை’ கொண்டாட்டம்... பள்ளி கல்வித்துறை உத்தரவு!

 

இன்று முதல் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை துவங்குகிறது. இன்று ஏப்ரல் 17ம் தேதி முதல் இம்மாதம் 28ம் தேதி வரை தமிழக அரசு பள்ளிகளில் ‘மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்’ என புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

அரசு பள்ளிகளில் புது முயற்சியாக இந்த கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவது வழக்கம். தற்போது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது.

அதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 'மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்' நடப்பட்ட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று ஏப்ரல் 17 ம் தேதி முதல் இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாளான ஏப்ரல் 28ம் தேதி வரை இந்த 'மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்' நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!