undefined

நாளை முதல் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்! 

 

 

தமிழகத்தில் 37,554 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். முன்பு கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் நாளில்தான் சேர்க்கை தொடங்குவது வழக்கம். ஆனால் சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கில் 2024 முதல் மார்ச் மாதத்திலேயே சேர்க்கை தொடங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 2026–27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. பள்ளிகளில் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி முடிக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் நலத்திட்டங்கள், உதவித்தொகைகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சேர்க்கை விகிதம் கணிசமாக உயர வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை வலியுறுத்தியுள்ளது. இதற்காக தலைமையாசிரியர்கள் விழிப்புணர்வு செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!