மாணவி பலாத்கார கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்... 'போதைப்பொருள்' தொடர்பு?! 12ம் வகுப்பு மாணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான பிளஸ் 2 மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த மாணவி வேறு ஒருவருடன் நட்பாகப் பழகுவதாகச் சந்தேகமடைந்த மாணவன், கடந்த சில வாரங்களாகவே அவருக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளான். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் மாணவியைத் தந்திரமாகப் பேருந்தில் அழைத்துச் சென்று, ஆளில்லாத ரயில்வே தண்டவாளப் பகுதியில் வைத்துத் தனது வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளான்.
அன்று மாலை 6 மணியளவில், ஒரு மாற்றுக் கைபேசி எண்ணிலிருந்து தனது தாய்க்கு அழைத்த அந்த மாணவி, "சீக்கிரம் வீட்டிற்கு வந்துவிடுவேன்" என்று கடைசியாகப் பேசியுள்ளார். அதன் பிறகு அவரது கைபேசி அணைக்கப்பட்டுள்ளது.
மாணவியின் சீருடைத் துப்பட்டாவையே பயன்படுத்தி அவரது கைகளைக் கட்டி, வாயை மூடி, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அந்த மாணவன் ஒப்புக்கொண்டுள்ளான். அந்த மாணவன் உள்ளூர் போதைப்பொருள் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
"இந்த மாணவனின் தொல்லை குறித்து ஏற்கனவே காவல்துறையிடம் புகார் அளித்திருந்தோம். ஆனால் அவர்கள் வெறும் எச்சரிக்கை மட்டுமே விடுத்து விட்டுவிட்டனர். அப்போது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் என் மகளை இழந்திருக்க மாட்டோம்" என மாணவியின் உறவினர்கள் வேதனையுடன் குற்றம் சாட்டியுள்ளனர்.
தற்போது அந்த மாணவன் வெளிமாடுகுன்னுவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, 16 வயதான அவரை ஒரு 'பெரியவராக' கருதி விசாரணை நடத்தலாமா என்பது குறித்துச் சிறுவர் நீதிக் குழுமம் முடிவு செய்யும்.
போதைப்பொருள் வேட்டை: மலப்புரம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் பள்ளி மாணவர்களிடையே பரவி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்தவும், "கேங்ஸ்டர்-லைட்" எனப்படும் வன்முறை கலாச்சாரத்தைத் தடுக்கவும் ஐ.ஜி அருள் ஆர். பி. கிருஷ்ணா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மாணவன் கொலை செய்தபோது போதையில் இருந்தாரா என்பதை உறுதிப்படுத்த ரத்தப் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!