நெகிழ்ச்சி... ஒரே மாணவிக்காக செயல்பட்ட ரயில் நிலையம்! 

 

 

ஜப்பான் நாட்டில் மக்கள் பயன்படுத்தாத நிலையங்களை மூட முடிவு செய்யப்பட்டது. இதற்காக அந்த வகையான ரயில் நிலையங்கள் குறித்து ஆய்வு மற்றும் பரிசீலணை நடத்தப்பட்டது. அப்போது குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் இருந்து  ஒரே ஒரு மாணவி மட்டும் தினசரி பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். அந்த மாணவியின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ரயில் நிலையம் பல ஆண்டுகள் இயக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.  

ஹொக்காய்டோ பகுதியில் அமைந்திருந்த கையு-ஷிராடாகி ரயில் நிலையம் என்ற நிலையத்தை பள்ளிக்கு செல்வதற்காக ஒரே ஒரு மாணவி மட்டும் பயன்படுத்தி வந்தார். அந்த நிலையம் மூடப்பட்டால் அந்த மாணவியின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் ரயில் சேவை தொடர முடிவு செய்யப்பட்டது.

கனா ஹராடா என்ற மாணவி தனது பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை தினமும் அந்த நிலையத்தில் ரயில் நின்று சென்றது. அவர் பள்ளி முடித்த 2016 மார்ச் மாதத்திற்குப் பிறகு தான் அந்த ரயில் நிலையம் மூடப்பட்டது. பொதுமக்களின் நலனை முன்னிட்டு எடுத்த இந்த முடிவு இன்று வரை மனிதநேயத்தின் எடுத்துக்காட்டாக பேசப்படுகிறது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!