அடுத்தடுத்து சிக்கல்... மீண்டும் ஆஜராகாத சீமான்... நடிகை விஜயலட்சுமியிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை!

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் மற்றும் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்திருந்த புகார் தற்போது விஸ்வரூபம் எடுத்து சீமானை சங்கடப்படுத்தி வருகிறது. இது தேர்தல் நேரத்தில் சீமானின் அரசியல் செயல்பாடுகளை ஒடுக்க செய்கிற நடவடிக்கை என்று நாம் தமிழர் கட்சியினர் கூறி வருகின்றனர்.

நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு புகாரளித்திருந்த நிலையில், அவரே அந்த புகாரை 2012ம் ஆண்டு வலிய சென்று திரும்ப பெற்றுக் கொண்டார். புகாரை திரும்ப பெற்றுக் கொண்டு இத்தனை வருடங்கள் கழித்து பல்வேறு காரணங்களுக்காக இந்த விசாரணை மீண்டும் நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கலாம் எனவும், 12 வாரங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

நீதிபதியின் இந்த உத்தரவின் பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி, நேற்று வழக்கு தொடர்பாக பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமி வீட்டுக்கு வளசரவாக்கம் போலீசார் மீண்டும் நேரில் சென்று அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். 

நடிகை விஜயலட்சுமியிடம் இருந்து இந்த வழக்கில் உள்ள முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை சேகரித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

சீமான் இன்று திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருவதால், போலீசார் அனுப்பிய சம்மனை ஏற்று இன்று காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராவாரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.வேலூரில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சீமான் வேலூரில் இருப்பதால் அவர் ஆஜராகவில்லை என்று வளசரவாக்கம் போலீசாரிடம் உரிய விளக்கம் அளிக்க சீமானின் வழக்கறிஞர்கள் குழு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?