திரையுலகில் அடுத்தடுத்து சோகம்!! பிரபல பாலிவுட் இயக்குநர் காலமானார்!!
பிரபல பாலிவுட் இயக்குனர் பிரதீப் சர்க்கார் உடல் நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 68. நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைபாடு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது.இருந்த போதிலும் பொட்டாசியம் அளவு வெகுவாகக் குறைந்ததால் உடல்நிலை மிகவும்மோசமடைந்து. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3:30 மணிக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவு செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரின் மறைவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள், நட்சத்திரங்கள், ரசிகர்கள், உறவினர்கள் தங்கள் இரங்கல் செய்தியைப் பதிவிட்டு வருகின்றனர்.இயக்குனர் பிரதீப் சர்க்கார் ராணி முகர்ஜியின் மர்தானி , பரினீதா என பல வெற்றி படங்களை இயக்கியவர். பிரதீப் சர்க்காரின் முதல் பாலிவுட் படம் பரினீதா. சைஃப், வித்யா, சஞ்சய் தத், தியா மிர்சா உட்பட பல முண்ணனி நட்சத்திரங்கள் அதில் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு லாகா சுனாரி மே தாக் என்ற படத்தை இயக்கினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க