சூடானில் 'மருத்துவமனை' மீது கொடூரத் தாக்குதல்... துணை ராணுவம் நடத்திய வெறிச்செயலில் 10 பேர் பலி!
உள்நாட்டுப் போரினால் நிலைகுலைந்து போயுள்ள சூடானில், மனிதாபிமானமற்ற ஒரு தாக்குதல் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு முக்கிய மருத்துவமனையைக் குறிவைத்துத் துணை ராணுவப் படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில், நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். போர் மேகங்களுக்கு இடையே உயிரைக் காக்கும் இடமாகக் கருதப்படும் மருத்துவமனையிலேயே இப்படி ஒரு ரத்த ஆறு ஓடியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துணை ராணுவத்தினர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் மருத்துவமனையின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. உயிருக்கு அஞ்சி ஓடிய நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிதறி ஓடிய நிலையில், காயமடைந்த பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "குணமடைய வந்த இடத்தில் பிணங்களாகப் போவோம் என்று நினைக்கவில்லை" என அங்கு தப்பிப் பிழைத்தவர்கள் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்குச் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே மருத்துவ வசதிகள் இன்றித் தவிக்கும் சூடான் மக்களுக்கு, இருக்கும் சில மருத்துவமனைகளும் இப்படித் தகர்க்கப்படுவது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமைதியை நிலைநாட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் வேளையில், துணை ராணுவத்தின் இந்த அத்துமீறல் சூடானில் போர் பதற்றத்தை இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளது. ஒரு புனிதமான சேவை மையத்தைச் சுடுகாடாக மாற்றிய இந்தச் செயல், மனித நேயத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!