undefined

நிச்சயமான திருமணம் திடீர் ரத்து? - காதலருடனான புகைப்படங்களை நீக்கிய நடிகை நிவேதா பெத்துராஜ்!

 

'டிக் டிக் டிக்', 'திமிரு புடிச்சவன்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், தான் அறிமுகப்படுத்திய காதலர் ரஜித் இப்ரானுடனான திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகப் பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் தனது காதலர் ரஜித் இப்ரானை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். விரைவில் இருவரும் திருமணத் தேதியை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நிவேதா பெத்துராஜ், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து காதலருடன் இருந்த அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.

மேலும், நிவேதாவும் ரஜித்தும் சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் பின்தொடர்வதையும் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. ரஜித்தும் தனது பக்கத்தில் இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் இவர்கள் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைகள்தான், திருமணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் பரவக் காரணமாக அமைந்துள்ளன. இந்த ஊகங்களுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் விரைவில் பதிலளிப்பாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!