தொடரும் சோகம்... பட்டாசு குடோனில் திடீர் வெடி விபத்து... உடல் சிதறி 2 பேர் பலி!
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த குடோன் அனுமதி இன்றி இயங்கி வந்ததாக தெரிகிறது. இன்று இந்த குடோனில் பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டது. இதனை அடுத்து நெய்வேலி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது பட்டாசு வெடித்து இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அத்துடன் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி சத்தியகீர்த்தி தலைமையில் தீயணைப்பு மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அங்கு வெடி விபத்தில் உடல் சிதறி பலியான 60 வயது சுந்தர்ராசு , 18 வயது ரியாஸ் இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பட்டாசு குடோன் விபத்து சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!