கும்பகோணம் வானில் திடீர் வெடி சத்தம்… மாணவிகள் அச்சம்!
கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 11 மணியளவில் வானில் திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதனால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. சிலர் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வதந்தி பரப்பினர்.
இந்த சத்தம் கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியிலும் உணரப்பட்டது. உடனடியாக மாணவிகள் வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பாதுகாப்பு நலன் கருதி கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காவல்துறையினர் கல்லூரிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
மாணவிகள் இதுபோன்ற சத்தம் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து வட்டாட்சியரிடம் விசாரித்தபோது, இது ராணுவ விமானம் பறந்தபோது ஏற்பட்ட சத்தம் மட்டுமே என்றும், வேறு எந்த ஆபத்தும் இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!