undefined

பெரும் சோகம்...  ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து... 2 பேர் கவலைக்கிடம்!

 


சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கருமலை கூடலில் வசித்து வருபவர் செம்பன். 75 வயதான இவருக்கு  சொந்தமான ரசாயன தொழிற்சாலையை இப்பகுதியில் இவர் நடத்தி வருகிறார்.   இந்த தொழிற்சாலையில் மக்னீசியம் சல்பேட் ரசாயனம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இரவு 11 மணிக்கு  ரசாயன தொட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.


இந்த தீ விபத்து குறித்து  தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இதனால் அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீ விபத்தின்போது பணியில் இருந்த நங்கவள்ளியை சேர்ந்த ராஜா கவுண்டர் (56), கருமலை கூடல் பகுதியை சேர்ந்த முருகன்(54) ஆகிய இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.  

இருவரையும் உயிருக்கு ஆபத்தான நிலையில்  தீயணைப்பு துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?