சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ… பயணிகள் அலறல்!
சென்னை விமான நிலைய சர்வதேச முனையம் டெர்மினல்–2 புறப்பாடு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 2-வது தளத்தில் உள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அலுவலக பகுதியில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. புகை பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தீ விபத்தைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 3 வாகனங்களுடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் சில நிமிடங்களில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் உடனடியாக செயல்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக விமான சேவைகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டன. தீ விபத்துக்கான முழு விவரம் குறித்து விமான நிலைய நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!