சேலத்தில் ஓடும் காரில் திடீர் தீ… நொடியில் தப்பிய 5 பேர்!
சேலத்தில் நேற்றிரவு சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கார் முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்த நிலையில், அதில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குரங்குசாவடி பெட்ரோல் பங்க் அருகே நிகழ்ந்தது.
சித்தனூர் புவனேஸ்வரி பகுதியைச் சேர்ந்த சக்திஅனீஷ், மனைவி கீர்த்தனா, மகள் எஸ்னா, தாய் கமலா, சகோதரி மோனிகா ஆகியோருடன் காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது காரின் இன்ஜினிலிருந்து கரும் புகை வெளியேறியது. இதைக் கண்ட அவர் உடனே காரை நிறுத்தி, அனைவரையும் அவசரமாக கீழே இறக்கினார்.
சில நொடிகளில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. நேரத்தில் காரை விட்டு இறங்கியதால் அனைவரும் உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!