undefined

சென்னை நோக்கி வந்த அரசுப்பேருந்தில் திடீர் தீவிபத்து... 80 சதவீதம் தீயில் கருகி சாம்பல்!

 

 தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து  சென்னை நோக்கி இன்று அதிகாலை அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. இந்த பேருந்து செங்கல்பட்டு மாவட்டம், முகையூர் பகுதியில் பேருந்து வந்தபோது பேருந்து பழுதடைந்தது. இதனை சரிசெய்து  குறைவான வேகத்தில் பேருந்து இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கூவத்தூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பேருந்து வந்தபோது, பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.  பேருந்து ஓட்டுநர் தியாகராஜன் மற்றும் நடத்துநர் மனோகரன் ஆகியோர் பேருந்திலிருந்து இறங்கினர்.  தீயணைப்புத்துறையினர் மற்றும்  கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாக மத்திய தொழில் பாதுகாப்பு படை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

அதற்குள்  சுமார் 80 சதவிதம் பேருந்து தீயில் எரிந்து நாசமாகியது.பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால், ஈசிஆர் சாலையில் சிறிது நேரம்  வாகன போக்குவரத்து  றிந்த  குறித்து கூவத்தூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?