பிளாஸ்டிக் குடோனில் திடீர் தீவிபத்து... பெரும் பரபரப்பு!
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் பாறைக்காடுமேட்டில் உள்ள செல்வம் என்பவரின் இடம், முன்பு பிளாஸ்டிக் குடோனாக வாடகைக்கு விடப்பட்டு வந்தது. தற்போது குடோன் காலியாக இருந்தாலும், அங்கு பெருமளவில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடந்தன.
இந்த நிலையில், அந்த குடோனை பராமரித்து வந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன், கழிவுப்பொருட்களை ஒன்றாக குவித்து வைத்து தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பிளாஸ்டிக் பொருட்கள் திடீரென எரிவடைந்து, அடர்த்தியான கரும்புகை வானத்தை மூடியது. அருகிலுள்ள குடியிருப்புகள் வரை புகை பரவியதால் மக்கள் பெரும் பதட்டத்துக்கு உள்ளானார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறிப்பாக, அருகிலேயே இருந்த பெட்ரோல் பங்கிற்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.தீ முழுமையாக அணைக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக எடப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் சில நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!