திடீர் உடல்நல குறைவு.. நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி!
திடீர் உடல் நலக் குறைவு காரணமாக நடிகர் பிரபு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்கள் ஓய்வுக்கு பிறகு, டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடிகர் பிரபு, கடந்த சில நாட்களாக சிறுநீரக கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதி பட்டு வந்த நிலையில், நேற்று முன் தினம், பிப்ரவரி 20ம் தேதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட் வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று நடிகர் பிரபுவுக்கு சிறுநீரக கல் அகற்றபட்டதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சிகிச்சைக்கு பிறகு நடைபெறும் பொதுவான மருத்துவ சோதனைகளுக்காக ஓரிரு நாட்களில், மருத்துவமனையில் தங்கியிருந்து அதன் பின்னர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ள நடிகர் பிரபு, இதுவரை 215 படங்களில் நடித்துள்ளார். 1982ம் ஆண்டு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரபுவுக்கு ஐஸ்வர்யா என்கிற மகளும் விக்ரம் பிரபு என்கிற மகனும் உள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பிரபு விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க