undefined

தக்காளி விலை திடீர் உயர்வு.. 1 கிலோ ₹100யைத் தொட்டது - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் காய்கறிகளின் விலை ஏறுமுகமாக உள்ள நிலையில், சமையலில் அத்தியாவசிய இடம்பிடித்துள்ள தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 'ஏழைகளின் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் தக்காளி, தற்போது ஆப்பிளுக்கு இணையான விலையில் விற்பனையாவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட முக்கியச் சந்தைகளில் தக்காளியின் விலை தரத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. ஒரு கிலோ தக்காளி ₹80 முதல் ₹100 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ₹800 முதல் ₹1,000 வரை ஏலம் போகிறது.

உடுமலை மற்றும் தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சந்தைக்கு வரும் தக்காளியின் அளவு பாதியாகக் குறைந்துள்ளது. கார்த்திகை மாதம் முதல் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாகத் தக்காளிச் செடிகளில் பூக்கள் கருகி, மகசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விளைச்சலில் 50% மட்டுமே தற்போது கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

முகூர்த்த நாட்கள் மற்றும் சபரிமலை சீசன் காரணமாகத் தக்காளியின் தேவை சந்தையில் அதிகரித்துள்ளது. விலை உயர்ந்தாலும் அதன் பலன் தங்களுக்குக் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

"மகசூல் பாதியாகக் குறைந்துவிட்டதால், விலை அதிகரித்தும் எங்களுக்கு லாபம் இல்லை. உரச் செலவு, பறிப்புக் கூலி மற்றும் போக்குவரத்துச் செலவுக்கே இந்த வருமானம் சரியாக இருக்கிறது. தக்காளிக்கு எல்லா காலங்களிலும் சீரான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உடுமலை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளியூர் வியாபாரிகள் அதிக அளவில் கொள்முதல் செய்யத் தொடங்கினால், வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் கணிக்கின்றனர். இதனால் உணவகங்கள் மற்றும் சாமானிய மக்களின் பட்ஜெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!