undefined

கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்... மீண்டும் சூடுபிடிக்கும் முதல்வர் பதவி விவகாரம்... இன்று சித்தராமையா, டி.கே.சிவக்குமார் டெல்லி பயணம்!

 

கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவி விவகாரம், சித்தராமையாவின் மகன் யதீந்திராவின் கருத்துக்களால் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இருவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி செல்கின்றனர். அங்கு அவர்கள் கட்சி மேலிடத் தலைவர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்த போது, முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட இழுபறிக்குப் பிறகு சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போது, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு சித்தராமையா தனது பதவியைத் டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது, சித்தராமையா ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே.சிவக்குமார் தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்று கோரி மீண்டும் போர்க்கொடி தூக்கினார். ஆரம்பத்தில் கட்சி மேலிடம் தலையிட்டு இருவரையும் அமைதிப்படுத்தியது. ஆனால், சமீபத்தில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, "தன்னை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற டி.கே.சிவக்குமாரின் கோரிக்கையை கட்சி மேலிடம் நிராகரித்து விட்டது" என்று கூறியதாகச் செய்திகள் வெளியானது. இது முதலமைச்சர் பதவி விவகாரம் பற்றிய விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் பெலகாவியில் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரும் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களைத் தனித்தனியாகச் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இவர்கள் இருவரும் இன்று டெல்லிக்குச் செல்கின்றனர். அங்கு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தப் பயணத்தின் போது அவர்கள் கட்சி மேலிடத் தலைவர்களைச் சந்தித்து முதலமைச்சர் பதவிப் பங்கீடு விவகாரம் குறித்துப் பேசுவார்களா என்ற கேள்வி கர்நாடக அரசியலில் வலுவாக எழுந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!