பெண் குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்... கொலை செய்ததாக தாய் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள வாடகை வீட்டில், வெறும் மூன்று மாதங்களே ஆன பிஞ்சுக் குழந்தை ஒன்று வீட்டின் தரைதளத்தில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழந்தையின் மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதால், ஆம்பூர் நகர போலீசார் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பெற்ற தாயே, நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும், குழந்தை பிறந்ததில் இருந்து கணவருடன் சண்டை எழுந்ததாக, மன அழுத்தத்தில் கொலை செய்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். குழந்தையின் தாயைக் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பெத்தலேகம் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டின் மேல்தளத்தில் அக்பர் பாஷா மற்றும் அர்ஷியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் கார் ஓட்டுநராகப் பணிபுரியும் அக்பர் பாஷாவுக்கு ஏற்கெனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் அர்ஃபலா பாத்திமா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. ஒருபுறம் மகிழ்ச்சி நீடித்த இந்தச் சூழலில்தான், இந்தக் கொடூரமான துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அர்ஃபலா பாத்திமா என்ற அந்தக் குழந்தை வீட்டின் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டதாகக் குழந்தையின் உறவினர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்த அவர்கள் உடனடியாகக் குழந்தையை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். குழந்தைக்குச் சிகிச்சைக்காக கொண்டு வந்த போதே, குழந்தை உயிரிழந்து இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் நகர போலீசார், குழந்தையின் மரணம் குறித்துக் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். வெறும் மூன்று மாதங்களே ஆன, நடக்கக்கூட முடியாத ஒரு பெண் குழந்தை, மேல்மாடியில் உள்ள வீட்டில் இருந்து எப்படித் தரைதளத்திற்கு வந்து, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழக்க முடியும்? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இந்தக் கேள்வி, சம்பவத்தின் மர்மத்தைக் கூட்டுவதாக அமைந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில், குழந்தையின் உடலை மீட்ட போலீசார், உடனடியாக அதை உடற்கூறு ஆய்வுக்காக (பிரேதப் பரிசோதனை) அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நகர போலீசார், குழந்தையின் தாய் அர்ஷியா மற்றும் தந்தை அக்பர் பாஷா ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
போலீசாரின் விசாரணையில், குழந்தையின் தாயே, தான் நிம்மதியாக தூங்க முடியவில்லை, தன்னால் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று குழந்தையைத் தண்ணீர் தொட்டிக்குள் போட்டு கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்து அதிர செய்திருக்கிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!