undefined

திடீர் திருப்பம்... வங்கியில் ரூ.1.5 கோடி தங்கத்தை விட்டுச்சென்ற பெண்.. விசாரணையில் மொத்தமா சிக்கிட்டாங்க!

 

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஒரு பிரபல தனியார் வங்கிக் கிளையில், முன்னாள் பெண் மேலாளர் ஒருவர் சுமார் ரூ. 1.50 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் தங்கக் கட்டிகளைப் பையில் வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் குறித்துப் போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

கடந்த டிசம்பர் 5ம் தேதி, பர்தா அணிந்த ஒரு பெண், வங்கிக் கிளைக்கு வந்து மேலாளரைச் சந்தித்து, புதிய வங்கிக் கணக்கு மற்றும் லாக்கர் தொடங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அதற்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால், அவற்றை எடுத்து வருவதாகக் கூறிச் சென்றுவிட்டார். அந்தப் பெண் அமர்ந்திருந்த இருக்கையில், அவர் தனது பையைத் தவறவிட்டுச் சென்றார். அந்தப் பையில் 24 காரட் ஒரு கிலோ தங்கக் கட்டி மற்றும் 22 காரட் 256 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி, வளையல் ஆகியவை இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 1.50 கோடி ஆகும். 5 நாட்கள் ஆகியும் அந்தப் பெண் திரும்பி வராததால், வங்கி நிர்வாகம் வேளச்சேரி போலீசாருக்குத் தகவல் அளித்தது.

வேளச்சேரி குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நகைகளை விட்டுச் சென்றது, அதே வங்கியின் முன்னாள் மேலாளரான பத்ம பிரியா (37) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பின்வரும் தகவல்கள் வெளிவந்தன:

பத்மபிரியாவின் கணவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். கணவர் கடன் வாங்கியவர்கள் பத்மபிரியாவுக்கு நெருக்கடி கொடுத்ததால், அவர் முன்பு பணிபுரிந்த வங்கியின் லாக்கரில் இருந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவரின் 250 கிராம் நகைகளைத் திருடியுள்ளார். இதற்காக அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, ஒரு வாரத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

அதேபோல் மற்றொரு வாடிக்கையாளரின் லாக்கரில் இருந்தும் இந்தக் தங்கக் கட்டி மற்றும் நகைகளை அவர் திருடியுள்ளார். கடன் கொடுத்தவர்களின் மிரட்டலால், மீண்டும் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில், திருடிய நகைகளை லாக்கரில் வைத்து ஒப்படைப்பதற்காகவே அவர் வங்கிக்கு வந்துள்ளார். லாக்கரில் வைக்க முடியாததால் நகையைப் பையில் விட்டுச் சென்றதும், தன்னை அடையாளம் தெரியாமல் இருக்கவே பர்தா அணிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பத்மபிரியா மீது தற்போது எந்தப் புதிய புகாரும் பதியப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட லாக்கர் வாடிக்கையாளரிடம் புகார் பெற்று அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!