undefined

திடீர் ட்விஸ்ட்... "ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு உரிமை உண்டு" - திருமாவளவன் விளக்கம்!

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் எழுப்பியுள்ள 'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கை குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

கூட்டணி அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரம் குறித்த திருமாவளவன் கூறுகையில், “விசிக-வும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை நீண்ட காலமாக முன்வைத்து வந்தாலும், தற்போதைய சூழலில் கூட்டணி ஒற்றுமையே முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். "தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரஸுக்கு முழு உரிமை உள்ளது. ஒரு கூட்டணி கட்சி தனது விருப்பத்தை முன்வைப்பதில் தவறில்லை" என்று திருமாவளவன் கூறினார்.

இந்த விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் தலைமைகள் பேசி ஒரு சுமுகமான முடிவை எடுக்கும் என்றும், இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்படாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கும் தீவிரமான கருத்துகளை அந்தப் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாகக் கருதத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிக-வின் அடிப்படை நோக்கங்களில் ஒன்று என்றாலும், 2026 தேர்தலைப் பொறுத்தவரை திருமாவளவன் நிதானமான போக்கைக் கடைபிடிக்கிறார். ஆட்சி அதிகாரம் என்பது விசிக-வின் நீண்ட காலக் கோரிக்கை. ஆனால் அதற்கான சரியான நேரம் இதுவல்ல" என்று அவர் கூறினார். விசிக தனது கோரிக்கையைத் தற்காலிகமாகப் பின்னுக்குத் தள்ளியுள்ளதே தவிர, அதைக் கைவிட்டுவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.

திருமாவளவன் தனது பேட்டியில் ஒரு முக்கிய எச்சரிக்கையை முன்வைத்தார். இப்போது நாம் ஆட்சியில் பங்கு என்று அதிகம் அழுத்தம் கொடுத்தால், அது கூட்டணியைப் பலவீனப்படுத்தும். இது தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் பாஜக போன்ற வலதுசாரி சக்திகளுக்கு சாதகமாக அமைந்துவிடும்" என்று எச்சரித்தார். மதச்சார்பற்ற சக்திகள் சிதறாமல் இருப்பதே தற்போதைய காலத்தின் கட்டாயம் என்பதே அவரது வாதமாக உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!