சர்க்கரை ஆலை விஷவாயு… 2 தொழிலாளர்கள் பலி!
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே படமாத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில் பராமரிப்பு பணியின்போது விபத்து ஏற்பட்டது. மொலாசஸ் தொட்டியை சுத்தம் செய்ய மோகனசுந்தரம் (35) முதலில் உள்ளே இறங்கினார். அப்போது வெளியான விஷவாயு தாக்கியதால் அவர் மயங்கி விழுந்தார்.
அவரை காப்பாற்ற சிவகங்கையை சேர்ந்த பொன்னழகு (58) தொட்டிக்குள் இறங்கினார். அவரையும் விஷவாயு தாக்கி மயங்கி விழச் செய்தது. சக ஊழியர்கள் விஷவாயுவை வெளியேற்றி இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், இருவரும் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலைக்கு சென்றவர்கள் சடலமாக கிடந்ததை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என உறவினர்கள் குற்றம்சாட்டினர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!