undefined

 கிறிஸ்துமஸ் முன்னிரவில் மசூதியில் தற்கொலை தாக்குதல்.... 5 பேர் பலி, 35 பேர் படுகாயம்!

 
 

நைஜீரியா நாட்டின் வடகிழக்கே உள்ள போர்னோ மாகாணம் மைதுகுரி பகுதியில், கேம்போரு சந்தை அருகேயுள்ள மசூதியில் நேற்று இரவு தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு மக்கள் அதிக அளவில் திரண்டிருந்த நிலையில், மாலை நேர தொழுகையின் போது மசூதிக்குள் திடீரென தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலால் அந்த பகுதி முழுவதும் தூசி மற்றும் புகையால் சூழப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கவச உடைகள் சிதறிக் கிடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளும் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளதாக போர்னோ மாகாண காவல் செய்தி தொடர்பாளர் நஹும் தாசோ கூறினார். நைஜீரியாவின் வட பகுதியில் 2009-ம் ஆண்டு முதல் போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் நடத்தி வரும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!