கடன் தொல்லையால் விபரீத முடிவு? ...  நள்ளிரவில் காரோடு தீ வைத்துத் தற்கொலை!  

 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக்குளம் பகுதியில், ஓரமாக நின்ற கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற திசையன்விளை போலீசார் காரைச் சோதனையிட்டபோது, உள்ளே உடல் கருகிய நிலையில் நான்கு பேர் சடலங்களாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ரபி (42), அவரது மனைவி செய்யது நஸ்ரின் பாத்திமா (40), மகள் ஆப்ரீன் பாத்திமா (15) மற்றும் மகன் முகமது காஜா (13) என்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த முகமது ரபி, கடன் தொல்லை காரணமாகத் தனது வீட்டை விற்றுவிட்டு கடந்த மார்ச் 13-ஆம் தேதி குடும்பத்துடன் நெல்லைக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் (மார்ச் 16) இரவு ஆற்றங்கரை பள்ளிவாசல் தர்காவில் நடைபெற்ற ரமலான் நோன்பு வழிபாட்டில் பங்கேற்ற இக்குடும்பத்தினர், அங்கிருந்தவர்களுக்கு உடைகளைத் தானமாக வழங்கிவிட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னரே இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். காரின் உட்புறம் தாயைக் கட்டியணைத்தவாறு பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டது பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார், தடய அறிவியல் துறையினருடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரில் இருந்த எலும்புகள் மற்றும் சாம்பல் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கருகி உயிரிழந்த இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!