undefined

ஏஐ உச்சி மாநாடு… மோடியை சந்தித்த சுந்தர் பிச்சை!

 

சுந்தர் பிச்சை இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்தியாவுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு துறையில் வளர்ச்சியை உருவாக்க விருப்பம் இருப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

இந்தியாவில் ஏஐ துறைக்கு பெரிய வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். உள்கட்டமைப்பு, ஆற்றல் முதலீடு, தரவுத்தொகுப்பு உருவாக்கம், உள்ளூர் நிறுவனங்களுடன் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் கூகுள் முழுமையாக ஒத்துழைக்கும் என்றும் உறுதியளித்தார். இந்தியாவின் திறமைகளை உலகளவில் முன்னேற்றுவதற்கும் நீண்டகால கூட்டாண்மை உருவாக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், புதுடெல்லியில் நடைபெறும் உலகளாவிய ஏஐ தாக்க உச்சி மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 110க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் பங்கேற்றுள்ளன. செயற்கை நுண்ணறிவு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் இந்திய ஐடி துறை 400 பில்லியன் டாலர் அளவை எட்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!