வற்றாத செல்வம் தரும் ஞாயிறு பிரதோஷம்... சொல்ல வேண்டிய மந்திரமும், பலன்களும்!
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு பிறகு 13ம் நாள் திரையோதசி திதி வருவது வழக்கம். இந்நாளில் தான் பிரதோஷம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்று மார்ச் 1ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாசி மாத பிரதோஷம். இன்றைய தினம் பிரதோஷ வேளையில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், இதுவரை செய்த அனைத்து பாவங்களும் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.
மாசி மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்துமே நினைத்து பார்க்க இயலாத பலன்களை தரவல்லவை. மார்கழி மாதத்தில் மனமுருகி நாம் செய்யும் பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் மும்மடங்கு பலன்களைக் கொடுக்கவல்லவை.
பிரதோஷ நாட்களில் மாலை நேரங்களில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பாக நடத்தப்படும். மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள இந்த பிரதோஷ நேரத்தில்தான் நந்தியம் பெருமான் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படும்.
இன்றைய தினம் மாசி மாதத்தின் பிரதோஷ நாளில், விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லலாம். இயன்ற அளவு அபிஷேகபொருட்களை வாங்கி கொடுக்கலாம் . ஆலயத்தின் ஓரத்தில் அமர்ந்து சிவசிந்தனையுடன் அபிஷேக , ஆராதனைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லி சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இன்று பிரதோஷ நேரத்தில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்:
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!
ஆலயத்தில் விளக்கேற்றி வழிபடலாம். அதன் பிறகு இயன்றவர்களுக்கு உணவளித்த பின் விரதம் முடிக்கலாம். இதனை செய்ய மனக்குழப்பங்களை போக்கி சிந்தையைத் தெளிவாக்கி, வாழ்வை வளமாக்கித் தருவார் எம்பெருமான். பிரதோஷ நாளில் சிவதரிசனம் செய்வோம். சிந்தையை தெளிவாக்குவோம். ஓம் நமசிவாய!!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!