undefined

இயற்கை இறைவனுக்குக் கவரி வீசும் உவரி: மாதம் முழுவதும் சிவலிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளி!

 

இயற்கை எழில் கொஞ்சும் கடலோரக் கிராமமான உவரியில் அமைந்துள்ள பிரம்பசக்தி உடனுறை சுயம்புநாதர் திருக்கோயில், மார்கழி மாதத்தில் ஒரு மிகப்பெரிய ஆன்மீக அதிசயத்தை நிகழ்த்தி வருகிறது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மீது மார்கழி மாதம் முழுவதும் சூரிய ஒளி விழுவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

பொதுவாகப் பல கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே சூரிய ஒளி மூலவர் மீது விழுவது வழக்கம். ஆனால், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் மார்கழி 30 நாட்களும் தினமும் காலை 7 மணி அளவில் சூரியன் தனது பொற்கரங்களால் சிவலிங்கத்தைத் தழுவி ஆராதனை செய்கிறான்.

ஒரு மாதம் முழுவதும் தடையின்றி இந்த நிகழ்வு நடப்பது தமிழகக் கோயில்களிலேயே மிகவும் அரிதான ஒன்றாகக் கருதப்படுகிறது. "இயற்கையே இறைவனுக்குக் கவரி வீசுவதால்" இவ்வூர் உவரி எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோயிலின் தனிச்சிறப்பான வழிபாட்டு முறை 'மண் சுமத்தல்' ஆகும்.

பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறக் கடற்கரை மண்ணை 11 அல்லது 41 ஓலைப் பெட்டிகளில் சுமந்து வந்து ஓரிடத்தில் கொட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குறிப்பாக வயிற்று வலி மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் குணமடைவார்கள் என்பது ஐதீகம்.

கடலுக்கு மிக அருகிலேயே கோயில் அமைந்திருந்தாலும், இங்குள்ள நான்கு ஊற்றுகளில் மட்டும் இனிப்பான நல்ல தண்ணீர் கிடைப்பது இறைவனின் பேரதிசயமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஊற்று நீரைக் கொண்டுதான் சுவாமிக்குத் தினமும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

சிவனின் 25 முக்கிய வடிவங்களில் ஒன்றான லிங்கோத்பவர், இங்கே சுயம்புவாகக் காட்சியளிக்கிறார். தைப்பூசம், வைகாசி விசாகம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், மார்கழி மாதத்தில் சூரிய ஒளி விழும் காட்சியைக் காணவே வெளியூர் பக்தர்கள் அதிகளவில் குவிகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!