சூப்பர்!! பணத்தை தயாரா வைங்க!! இன்று முதல்  சிறுசேமிப்பு திட்ட வட்டி உயர்வு!!

 

அஞ்சலக சிறுசேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.  அதன்படி அஞ்சலக சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது.இந்நிலையில், அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2வது முறையாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி  ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக, தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி, 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல் பெண் குழந்தைகள் பெயரில் போடப்படும் 'செல்வமகள்' சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது.  கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி, 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8 சதவீதத்தில் இருந்து 8.2 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், 120 மாதங்களுக்கு பதிலாக 115 மாதங்களில் முதிர்வடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஓராண்டு கால டெர்ம் டெபாசிட்டுக்கான வட்டி, 6.6 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதமாகவும், 2 ஆண்டு கால டெபாசிட் வட்டி 6.8 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும், 3 ஆண்டுகால டெபாசிட் வட்டி 6.9 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும், 5 ஆண்டுகால டெபாசிட் வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர வருவாய் திட்ட வட்டி, 30 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 7.4 சதவீதம் ஆக்கப்பட்டுள்ளது. சேமிப்பு டெபாசிட்டிற்கு  பழைய வட்டி விகிதமே நீடிக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!