undefined

புத்தாண்டு பரிசு: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் சூப்பர் சலுகை!

 

2026 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் உள்நாடு மற்றும் சர்வதேச பயணங்களுக்கு மிகக் குறைந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகை நேற்று தொடங்கி 2026 ஜனவரி 1-ந்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு பொருந்தும். www.airindiaexpress.com இணையதளம், மொபைல் ஆப் மற்றும் முக்கிய முன்பதிவு மையங்களில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

உள்நாட்டு விமான பயணங்களுக்கு ரூ.1,850 என்ற சலுகை கட்டணத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகளை 2026 ஜனவரி 12-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை எந்த நாளிலும் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த கட்டணத்தில் நீண்ட கால பயண வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல் சர்வதேச விமான பயணங்களுக்கு ரூ.5,355 என்ற சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை 2026 ஜனவரி 12-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை பயன்படுத்தலாம். இந்த சலுகை ஏர் இந்தியா விமானங்களுக்கு பொருந்தாது எனவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!