undefined

 தென்னிந்தியர்கள் இந்தி தெரியாததால் தனிமைப்படுத்தப்படுவதை விரும்பவில்லை... உச்சநீதிமன்ற நீதிபதி  நாகரத்னா ’நச்’! 

 
 

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி சூர்யாகாந்த், நாட்டின் அனைத்து மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்தி பயன்பாட்டை மேம்படுத்துவதில் பெருமை கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார். அவரது கருத்துகள் சிலரிடையே விவாதத்தை ஏற்படுத்தின.

இதற்கு பதிலளித்த நீதிபதி நாகரத்னா, இந்திய அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் தென்னிந்தியாவின் ஆறு மொழிகள் உள்ளன என்பதை நினைவுபடுத்தினார். இந்தியா ஒரு துணைக்கண்டம் போன்றது; மொழிவாரியான பல்வகைமை குறித்த நிதானம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் ஆங்கிலம், இந்தி பேசப்படாத சூழலை எடுத்துக்காட்டி நடைமுறைக் கஷ்டங்களையும் விளக்கினார்.

மாவட்ட நீதிமன்றங்களில் பிராந்திய மொழிகளும், உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் ஆங்கிலமும் பயன்படுத்தப்படுவது அவசியம் என கூறினார். இல்லையெனில் நீதிபதிகளை மாநிலங்களுக்கு இடையே மாற்றுவது சாத்தியமில்லை என்றும், இந்தி தெரியாத தென்னிந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்பதால் கவனமாக அணுக வேண்டும் எனவும் நீதிபதி நாகரத்னா தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!