சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உத்தரவை எதிர்த்து மறுஆய்வு மனுக்கள் - ஏப்.7 முதல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
சபரிமலை மறுஆய்வு மனுக்கள்: ஏப்ரல் 7 முதல் இறுதி விசாரணை - உச்ச நீதிமன்றம் அதிரடி அட்டவணை!உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கிற்கான விரிவான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு இருந்த தடையை நீக்கி, அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மத்திய அரசு உட்படப் பல்வேறு தரப்பிலிருந்து மொத்தம் 66 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மதம் சார்ந்த நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் ஆகியவற்றுக்கு இடையேயான மோதலாக இந்த வழக்கு பார்க்கப்படுகிறது.
மனுக்களை விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளது. மார்ச் 14: இரு தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய கடைசித் தேதி. ஏப்ரல் 7 & 8: தீர்ப்பை எதிர்ப்பவர்களின் (மறுஆய்வு மனுதாரர்கள்) வாதங்கள் கேட்கப்படும். ஏப்ரல் 14 & 16: தீர்ப்பை ஆதரிப்பவர்களின் வாதங்கள் கேட்கப்படும். ஏப்ரல் 21: இரு தரப்பிலும் விளக்க வாதங்கள் நடைபெறும். ஏப்ரல் 22: வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடையும்.
இந்த வழக்கைச் சீராக நடத்த ஏதுவாக, தரப்பு வாரியாக ஒருங்கிணைப்பு வழக்கறிஞர்களை நீதிமன்றம் நியமித்துள்ளது: மறுஆய்வு மனுதாரர்கள் சார்பாக கிருஷ்ணகுமார் சிங், மறுஆய்வை எதிர்ப்போர் சார்பாக ஷாஷ்வதி பரி. மேலும், நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் கே.பரமேஷ்வர் மற்றும் சிவம் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி, இது 9 நீதிபதிகள் கொண்ட விரிவான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மதம் சார்ந்த நம்பிக்கைகளில் நீதிமன்றம் எந்த அளவிற்குத் தலையிடலாம் என்பது குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை இந்தத் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!