undefined

  பழனியில் சூர்யா சாமி தரிசனம்... படத்தின் கதை  புத்தகத்தை வைத்து வேண்டுதல்!

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் இன்று காலை 8 மணியளவில் நடிகர் சூர்யா சாமி, படக்குழுவினருடன் கால பூஜையில் கலந்து கொண்டு படத்தின் கதையை வைத்து முருகனை வழிபட்டு, படம் வெற்றியடைய வேண்டிக் கொண்டார். 

இன்று காலை பழனி மலை அடிவாரத்திற்கு வந்திருந்த நடிகர் சூர்யா, அங்கிருந்து ரோப்கார் மூலம் மலை கோயிலுக்கு சென்று, காலை 8 மணிக்கு நடைபெறும் சிறுகால சந்தி பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். தனது அடுத்த படத்தின் கதையை வைத்து பூஜை செய்து வழிபட்டார். 

நடிகர் சூர்யாவுக்கு கோயில் நிர்வாகத்தினர் பிரசாதம் வழங்கினர். அதன் பின்னர் கோயிலை வலம் வந்த சூர்யா, அங்கிருந்து சித்தர் போகர் சன்னதியில் வழிபட்டார். நடிகர்  சூர்யாவை காண குவிந்த ரசிகர்கள், அவருடன் செஃல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். 

வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 46வது படத்தின் பூஜை ஹைதராபாத்தில் தொடங்கிய நிலையில், பழனியிலும் பூஜை செய்ய வேண்டும் என்பதற்காக படத்தின் கதையை வைத்து பழனியில் பூஜை செய்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது