கோர விபத்து... ஆட்டோ மீது எஸ்யூவி   கார் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி!

 

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் தாதிபூர் பகுதியில் இன்று நேரிட்ட கோர விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாதிப்பூரைச் சேர்ந்த சுபம் ஷக்யா என்பவர், தனது குடும்பத்தினருடன் அருகில் உள்ள சீத்தலா மாதா கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் வந்த எஸ்யூவி கார் ஒன்று, ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் கோரத்தினால் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியதுடன், அதில் பயணம் செய்த சுபம் ஷக்யா உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே துடிக்கத் துடிக்க உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், பலத்த காயமடைந்து உயிருக்குத் போராடிக் கொண்டிருந்த மற்றவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய கார் டிரைவரை 2 மணி நேரத் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், விபத்துக்குக் காரணமான அந்த எஸ்யூவி காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவில் வழிபாட்டை முடித்துவிட்டுத் திரும்பிய போது நிகழ்ந்த இந்த விபத்து, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனை முன் திரண்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதே இந்த 5 உயிர்களின் பலிக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!