பேருந்தில் திடீர் தீ விபத்து... 6 பேர் உடல் கருகி பலி... பெரும் சோகம்!
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் பெர்ன் அருகே உள்ள கெர்சர்ஸ் பகுதியில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற போது உள்ளே திடீரென புகை எழத் தொடங்கியது. சில நிமிடங்களில் அந்த புகை பெரிய தீயாக மாறியது. இதனால் பேருந்து முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தீ மளமளவென பரவியதால் பயணிகள் பதற்றத்தில் வெளியேற முயற்சித்தனர். சிலர் உடனடியாக பேருந்திலிருந்து தப்பித்து ஓடினர். ஆனால் தீ பரவியதால் சிலர் உள்ளேயே சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 3 பேர் கடுமையாக படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!