டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு ஊதா, காவி நிறங்களில் புது ஜெர்சி வெளியீடு!
அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 10-வது சர்வதேச டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
ராய்ப்பூரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று முன்தினம் (டிசம்பர் 3) நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியின்போது, இந்திய அணியின் ஜெர்சியை ரோஹித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் வெளியிட்டனர்.
புதிய ஜெர்சியில் ஊதா, காவி மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் விளம்பரதாரர்களின் லோகோக்களும் இதில் உள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தத் தொடர் நடைபெற உள்ளது.
இத்தொடரில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா ஆகிய அணிகளும் உள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 7-ஆம் தேதி அமெரிக்காவுடன் மோத உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!