டி20 உலகக்கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் மகா யுத்தம்.. அனல் பறக்கும் ஆட்டம்!
நடப்பு டி20 உலகக்கோப்பையின் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இரு அணிகளும், இன்று தங்களது மூன்றாவது லீக் ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இலங்கை, கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் இன்று போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 16 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 13-3 என்ற கணக்கில் வலுவான முன்னிலை வகிக்கிறது. டி20 உலகக்கோப்பையைப் பொறுத்தவரை, 8 போட்டிகளில் விளையாடி இந்தியா 7-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தங்களது முதல் இரண்டு போட்டிகளில் (அமெரிக்கா மற்றும் நமீபியா) வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. திலக் வர்மா, இஷான் கிஷன் மற்றும் பும்ரா ஆகியோர் மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளனர்.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பாபர் அசாம் மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகியோரை அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது.
கொழும்புவில் இன்று பகல் நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு 50% முதல் 70% வரை வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரவு நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், போட்டி தடைபட வாய்ப்பு குறைவு என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மழை குறுக்கிட்டால் போட்டி ஓவர்கள் குறைக்கப்படலாம்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக, சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான கொழும்பு ஆடுகளத்தில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் தரப்பில் உஸ்மான் தாரீக் மீது வைக்கப்பட்ட 'சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு' புகார்களுக்குப் பிறகு, அவர் விளையாடுவது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!